FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜன நாயகன் ரிலீஸுக்கு அரசு விடுமுறையா? அதிமுக விமர்சனம்!

ஜன நாயகன் ரிலீஸுக்கு அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அதிமுக விமர்சனம்.

Updated On : 19 ஜூலை 2026, 12:12 pm IST
ஜன நாயகன் போஸ்டர் - X
பகிர்:

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியிடுகிற நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாவது:

”தமிழ்நாட்டில் த.வெ‌.க. ஆட்சி வராது என நினைத்து, அறம், பொருள், இன்பம் என 326 சாத்தியமே இல்லாத, செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம், நிதி ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல்,காணல் நீரைப் போன்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். இப்போது யாருமே, ஏன் விஜய்யே எதிர்பார்க்காமல், தவெ‌க ஆட்சி அமைத்து 75 நாள்களைக் கடந்து சென்றுவிட்டாலும், ஆட்சி அமைத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையோ என்று நமக்கு தோன்றுகிறது.

தேர்தல் அறிக்கையில் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது ஆட்சி அமைந்தவுடன் 500 யூனிட் வரை உபயோகிக்கும் மின் பயனாளர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரக் கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பு, நடைமுறையிலே வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கிறது.

தற்போது, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை த.வெ.க. அரசு அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 4,41,667 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினால், இதற்கான தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூபாய் 580.79 கோடி. இதனோடு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, ஆகியவற்றை சேர்த்தால் மொத்த செலவு இதற்காக 750 கோடி ஒதுக்கீடு செய்வதாக கூறப்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தாய்மாமன் திட்டம் எவ்வளவு பங்களிக்க முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜன நாயகன் பட வெளியீட்டு விழாவை, திருவிழாபோல கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்து இருக்கும் அமைச்சர் ஆனந்த், அடுத்த அதிரடி அறிவிப்பாக ஜன நாயகன் திரைப்படம் வெளியிடுகிற நாளில், அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.

summary

Former AIADMK Minister R.B. Udhayakumar has remarked that it would come as no surprise if a government holiday were declared on the day Vijay's film Jananayagan is released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments