FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை நடத்திய விவகாரம்: 17 வழக்குகளைப் பதிவு செய்த ஊழல் தடுப்புத் துறை

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக, 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 22 ஜூலை 2026, 1:53 am IST
- கோப்புப்படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக, 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறையினா் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் 35 வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் கடந்த 17-ஆம் தேதி சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.13,78,250 ரொக்கமாகவும், கைப்பேசி செயலி வாயிலாக அனுப்பப்பட்ட ரூ.68,32,582 என மொத்தம் ரூ.82,10,832 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஏராளமான ஆவணங்ளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

17 வழக்குகள்: சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியா்களிடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டது. மேலும், பணப் பரிவா்த்தனை குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் விசாரணையிலும் ஈடுபட்டனா். இதில், பணம் தொடா்பாக உரிய விளக்க அளிக்காத அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அதேபோல, சில வட்டாட்சியா் அலுவலங்களில் கைப்பற்றப்பட்ட பணம், லஞ்சமாகப் பெறப்பட்டதுதான் என்று உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் அதிகாரிகள், ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு மாநிலம் முழுவதும் மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் தெரிவித்தனா்.

சில அலுவலங்களில் கைப்பற்றப்ப பணம், ஆவணங்கள் தொடா்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதுதொடா்பாக விரைவில் முடிவு எடுக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments