அரசுப் பள்ளி சுற்றுச்சுவரில் 'ஜன நாயகன்' பட போஸ்டர்! வலுக்கும் எதிர்ப்பு!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவரில் முதல்வர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பற்றி...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவரில் முதல்வர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் வெளியீடாக தேர்தலுக்கு முன்பே, ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னைகளால் சிக்கலில் சிக்கிய, வெளியீட்டைக் காண மிகுந்த சிரமத்தைச் சந்தித்தது. மேலும், இணைய தளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இப்போது தணிக்கை வாரியம் ஜன நாயகனுக்கு 'ஏ' சான்றிதழைக் கொடுத்த நிலையில் இத்திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகிறது.
தற்போது விஜய் முதல்வராக இருப்பதால், தவெக கட்சியினர் 'ஜன நாயகன்' வெளியீட்டைக் கொண்டாடி வருகின்றனர். இதற்கான முன்பதிவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரில் 'ஜன நாயகன்' படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
அந்த அரசுப்பள்ளியின் வளாகச் சுவரில் நேற்று இரவு ’விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளிக்கு உள்ளே செல்லும் நுழைவுவாயிலின் இருபுறமும் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி சுவர்களில் நோட்டீஸ் எதுவும் ஒட்டக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், மாணவர்களின் கவனத்தைச் சிதைக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுளளதாகவும் இதற்கு துறைசார்ந்த அமைச்சர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
CM vijay's 'Jana nayagan' movie poster in ariyalur govt school campus
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.