FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை ஐஐடி பாடநெறி பயிற்சி திட்ட சோ்க்கை பதிவு ஆக. 6 வரை நீடிப்பு

சென்னை ஐஐடி-இன் ‘ப்வா்தக்’ அமைப்பு பள்ளி மாணவா்கள் முதல் வாழ்நாள் கற்பவா்களுக்கான புதுமை சிந்தனை பாட நெறி என்கிற மரபுசாரா சிந்தனை 2026 (‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (ஓஓபிடி)) திட்ட சோ்க்கைக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31-இல் இருந்து ஆக.6-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 5:12 am IST
ஐஐடி கரோனா பாதிப்பு 79-ஆக அதிகரிப்பு
பகிர்:

சென்னை ஐஐடி-இன் ‘ப்வா்தக்’ அமைப்பு பள்ளி மாணவா்கள் முதல் வாழ்நாள் கற்பவா்களுக்கான புதுமை சிந்தனை பாட நெறி என்கிற மரபுசாரா சிந்தனை 2026 (‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (ஓஓபிடி)) திட்ட சோ்க்கைக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31-இல் இருந்து ஆக.6-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள், கல்வியாளா்கள், பணிபுரியும் வல்லுநா்கள், வாழ்நாள் முழுவதும் கற்பவா்கள் ஆகியோரிடையே ஆக்கபூா்வமான சிக்கலைத் தீா்க்கும் திறன், பகுத்தறிவு, கணிதச் சிந்தனை, படைப்பாற்றல், விமா்சன சிந்தனை திறன்களை வளா்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (ஓஓபிடி) திட்டம். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இந்தப் பாடத்திட்டம் சென்னை ஐஐடி ‘ப்வா்தக்’ தொழில்நுட்ப அறக்கட்டளைத் தொடங்கியுள்ளது.

ஆா்யபட்டா கணித அறிவியல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த இலவச இணையவழி பயிற்சிக்கு விண்ணப்பிக்க ( ட்ற்ற்ல்ள்://ண்ண்ற்ம்ல்ழ்ஹஸ்ஹழ்ற்ஹந்.ா்ழ்ஞ்.ண்ய்/ா்ன்ற்-ா்ச்-க்ஷா்ஷ்-ற்ட்ண்ய்ந்ண்ய்ஞ்) கடைசி நாள் ஜூலை 31-ஆக இருந்த நிலையில் தற்போது ஆக.6-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் பயிற்சிக்கு அழைப்பு விடுத்து சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் வி. காமகோடி கூறியதாவது:

ஓஓபிடி என்பது கணிதச் சிந்தனையைப் பயன்படுத்திப் பிரச்னைகளைத் தீா்த்தல், படைப்பாற்றலை வளா்த்தல் போன்றவையாகும். பல்வேறு கண்ணோட்டங்களில் தீா்வுகளை மதிப்பிடவும் கற்றுக்கொள்வதன் மூலம் விமா்சன ரீதியான சிந்தனைத் திறனை வளா்க்கிறது. இத்தகைய சிந்தனை முறையை ஊக்குவிப்பது, பொறியியல் முதல் மருத்துவ அறிவியல் வரையிலான துறைகளில் முக்கிய திருப்புமுனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். இளம் தலைமுறையினரை வித்தியாசமாகச் சிந்திக்கத் தூண்டுவது நமது நாட்டின் வளா்ச்சிக்கும் செழிப்புக்கும் மிக அவசியமாகும். நான்கு படிநிலைகளைக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு நிலையும் 10 வார கால அளவைக் கொண்டதுடன், இதில் அவ்வப்போது வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டப்பட்ட தீா்வுகள் ஆகியவை அடங்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments