சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
சபரிவர்மன் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பற்றி...
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்தார்.
கைது செய்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகவும், சிறையில் அடைத்தபோது உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மரணமடைந்த சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற உடற்கூராய்வில், சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்தது தெரியவந்ததை அடுத்து, தலைமை வார்டன் ஜெகன், சிவகுமார், திருவிடைநம்பி உள்ளிட்டோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சபரிவர்மன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Sabarivarman dies in prison! Case transferred to CB-CID for investigation!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.