முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஜன நாயகன் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ், விஜய் பாதுகாவலர்!

ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்த பிரபலங்கள் குறித்து...

Updated On : 23 ஜூலை 2026, 9:24 am IST
கீர்த்தி சுரேஷ் / விஜய்யின் பாதுகாவலர் - எக்ஸ்
பகிர்:

சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியைக் கண்டு ரசித்தார்.

இதேபோன்று விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலரும் திரையரங்கிற்கு வந்தார். விஜய்யின் ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல்நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4.30 மணிக்கே ஜன நாயகன் திரையிடப்பட்டது.

தமிழ்நாட்டில் கோவையில் மட்டும் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனிடையே சென்னையில் முதல் காட்சியைக் காண நடிகை கீர்த்தி சுரேஷ் குரோம்பேட்டை திரையரங்கிற்கு வந்துள்ளார்.

இதுமட்டுமின்றி நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் அனிருத், விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலர் ஆகியோரும் படம் பார்க்க வருகைப்புரிந்தனர்.

ஜன நாயகன் திரைப்படத்திற்கு சென்சார் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. சட்டவிரோதமாக இணையதளங்களில் படம் வெளியானது. அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் படம் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று திட்டமிட்டபடி வெளியானது.

விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

Keerthy Suresh and Vijay's bodyguard watched Jananayagan in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments