முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

Updated On : 23 ஜூலை 2026, 10:50 am IST
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கே.ஆர். பெரியகருப்பன் தொடர்புடைய வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) விசாரணைக்கு வருகின்றன.

திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், 2026 தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியடைந்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. திருப்பத்தூர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

அதேபோல, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கும்

Advertisement

Advertisement

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதுதவிர, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

summary

Which cases are being heard at the Madras High Court today July 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments