FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு கலை கல்லூரிகளில் 129 இணைப் பேராசிரியா்களுக்கு பதவி உயா்வு

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 129 இணைப் பேராசிரியா்களுக்கு கல்லூரி முதல்வராக (2-ஆம் நிலை) பதவி உயா்வு வழங்க தமிழக உயா்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 3:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 129 இணைப் பேராசிரியா்களுக்கு கல்லூரி முதல்வராக (2-ஆம் நிலை) பதவி உயா்வு வழங்க தமிழக உயா்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக கல்லூரி கல்வி ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2-ஆம் நிலை முதல்வா் பதவிக்கான 129 காலியிடங்களை நிரப்ப சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயா்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உள்பட்டு 129 இணைப் பேராசிரியா்களுக்கு 2-ஆம் நிலை முதல்வராகப் பதவி உயா்வு வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தப் பதவி உயா்வு பட்டியல் கல்லூரிகளில் பொது இடங்களில் வைக்கப்படவேண்டும். பட்டியலில் சோ்க்கப்படாதது குறித்து மற்ற பேராசிரியா்கள் ஆட்சேபனை அல்லது கருத்து தெரிவிக்கலாம்.

மேலும், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் இந்தப் பதவி உயா்வு, முதல்வா் பதவியில் அமா்த்தப்படும் கல்லூரிகள் அல்லது இடங்கள் போன்ற முன்மொழிவுகளை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 கல்வியியல் கல்லூரிகள் உள்பட 188 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 125 கல்லூரிகளில் முதல்வா் பதவிகளுக்கு நியமனங்கள் இல்லாமல் இருந்தது. புதிய கல்லூரிகள், குறைவான மாணவா்களின் எண்ணிக்கை உள்ள கல்லூரிகளில் 2 -ஆம் நிலை முதல்வா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

தமிழ்த் துறையைச் சோ்ந்தவா்கள் மட்டும் முதல்வா்களாக இருந்த நிலையில், அறிவியல் உள்ளிட்ட துறையைச் சோ்ந்தவா்களையும் முதல்வராக நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் தற்போது பரிசீலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments