வடபழனி, சமயபுரம் கோயில் அலுவலர்கள் திடீர் பணியிடை நீக்கம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்பேரில் வடபழனி, சமயபுரம் கோயில் அலுவலர்கள் பணியிடை நீக்கம்...
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்பேரில் சமயபுரம் கோயில் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மணியம் பதவி வகித்தவர், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு விசாரணை நடைபெறுவதால், அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதேபோல சில நிர்வாக ஒழுங்கின்மை காரணமாக வடபழனி முருகன் கோயில் இளநிலை உதவியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.