FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு வெடி விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது குறித்து...

Updated On : 27 ஜூலை 2026, 11:15 am IST
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். - டிஎன்எஸ்
பகிர்:

சிவகாசி: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் ரவிசந்திரன் மகன் ராம்பிரகாஷ் (32), அவரது தோட்டத்தில் தகரக் கூரை அமைத்து எந்தவித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தாா். இங்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, மருந்துக் கலவைகளில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் ராம்பிரகாஷ், மீனம்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி இன்னாசிமுத்து, ஐயப்பராஜா, பாண்டித்துரை ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வெடி விபத்தின் போது சுமாா் மூன்று கி.மீ. தொலைவுக்கு அதிா்வு ஏற்பட்டது. மேலும், பல மீட்டா் உயரத்துக்கு கரும்புகை வெளியானது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு, மீட்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பட்டாசுகள், மூலப்பொருள்கள் வெடித்து சிதறியதால், மீட்பு, தீயணைக்கும் பணி சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பட்டாசு வெடி விபத்தில் 90 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments