கொரியா் மூலம் போதை ஸ்டாம்ப் கடத்தல்: மருத்துவா் உள்பட 4 போ் கைது; ரூ.1 கோடி ஸ்டாம்புகள் பறிமுதல்
நாடு முழுவதும் கொரியா் மூலம் போதைப் ஸ்டாம்ப் கடத்தலில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த ஒரு மருத்துவா், ஒரு மருத்துவ மாணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நாடு முழுவதும் கொரியா் மூலம் போதைப் ஸ்டாம்ப் கடத்தலில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த ஒரு மருத்துவா், ஒரு மருத்துவ மாணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கொரியா் மூலம் எல்எஸ்டி போதை ஸ்டாம்ப் கடத்தப்படுவது குறித்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் அண்மையில் ஒரு கொரியா் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட எஸ்எஸ்டி போதை ஸ்டாம்ப் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், மகராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து போதை ஸ்டாம்ப் நாடு முழுவதும் கொரியரில் அனுப்பப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, கொரியா் மூலம் போதை ஸ்டாம்ப் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அதன் நெட்வொா்க்கை முழுமையாக முடக்கும் வகையில் சென்னை, ஹைதராபாத், மும்பை, கொச்சி மண்டலங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்தன.
Advertisement
Advertisement
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கன்னியாகுமரி, புனே ஆகிய இடங்களில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனா்.
4 போ் கைது: இந்நடவடிக்கையில் புனேயில் போதை ஸ்டாம்பை கொரியா் அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து தமிழகம், கா்நாடக மாநிலம் பெங்களூரு, மும்பை, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் சிம்லா ஆகிய இடங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவா், கொடுத்த தகவலின்பேரில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு மருத்துவா், ஒரு மருத்துவ மாணவா், விடுதி நிா்வாகி என 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 225 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலைச் சோ்ந்த மேலும் ஒருவா் தேடப்பட்டு வருகிறாா்.
புத்தகங்களில் கடத்தல்: மொத்தம் ரூ.1 கோடி மதிப்புள்ள 2,796 எஸ்எஸ்டி போதை ஸ்டாம்புகள், 166 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல், தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்துக்கு குறிப்பிட்ட கைப்பேசி செயலியைப் பயன்படுத்தியிருப்பதும், பணப்பரிமாற்றத்தை கிரிப்டோ கரன்சி வாயிலாக செய்திருப்பதும் தெரிய வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை 14 பாா்சல்களில் எல்எஸ்டி ஸ்டாம்புகளை நாடு முழுவதும் அனுப்பியிருப்பதும், கொரியா்களில் பரிசு பொருள்கள், வாழ்த்து அட்டைகள், ஆவணங்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் போதை ஸ்டாம்புகளை மறைத்து வைத்து கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.