FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு நடந்துகொள்வது சரியல்ல! - தி.க. பிரசார அனுமதி மறுப்புக்கு சிபிஎம் கண்டனம்!

திராவிடர் கழகத்தின் பிரசாரப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்...

Updated On : 30 ஜூலை 2026, 8:50 pm IST
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - முதல்வர் விஜய். - கோப்புப்படம்
பகிர்:

திராவிடர் கழகத்தின் பிரசாரப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தலைமையில், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக இன்று (ஜூலை 30) சென்னையில் நடைபெறவிருந்த இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்கு அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பெரியார் திடலில் காவல் துறையினர் குவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரைப் பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கருத்துரிமை, பேச்சுரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதனை மறுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்துகொள்வது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.

summary

The Communist Party of India (Marxist) has condemned the denial of permission for the Dravidar Kazhagam's campaign tour.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments