FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஏன், நாமெல்லாம் கோட் - சூட்லாம் போடக் கூடாதா? விஜய் கேள்வி

கோட் - சூட் அணிவது பற்றி முதல்வர் விஜய் பேச்சு...

Updated On : 1 ஜூன் 2026, 6:07 pm IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

அதிகாரம் செய்கிறவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் - சூட் போட வேண்டுமா? என தான் கோட் - சூட் அணிவது பற்றி முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் முதல்வர் விஜய் பேசுகையில்,

"நாம் கோட் - சூட் எல்லாம் போட்டுகொண்டு வருகிறோம் இல்லையா, அதைப்பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள்.

Advertisement

Advertisement

ஏன் நாமெல்லாம் கோட் - சூட்லாம் போடக் கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் - சூட் போட வேண்டுமா? நான் போடும் இரண்டே நிறம் நம்முடைய மனசு மாதிரி கருப்பு - வெள்ளை(பிளாக்- ஒயிட்).

எல்லாவற்றிலும் கருப்பு - வெள்ளை போலவே நான் இருப்பேன் என்பதற்குத்தான் இந்த கலர். அந்த கருப்பு நிறம், யாரைக் குறிக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

நீங்கள் தற்குறி தற்குறி என்று கூறியவர்கள்தான் இன்று உங்களை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள், எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?

பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டுமே எனக்கு 2 கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப்போகிறோம். என்னை வெற்றிபெற வைத்ததைப்போல, இடைத்தேர்தலில் அவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

summary

Chief Minister Vijay speaks about wearing a coat and suit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments