FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரூர் சம்பவத்திற்குப் பின்... முதல்வராக சாலை வலம் செல்லும் விஜய்!

கரூரில் முதல்வர் விஜய் சாலைவலம் செல்வது பற்றி...

கரூர் தாந்தோணி மலைப் பகுதியில் ரோட் ஷோ நடத்திய முதல்வர் விஜய்யை கண்டு களித்த பொதுமக்கள் - DIN
பகிர்:

கரூரில் முக்கிய சாலைகள் வழியாக முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொண்டார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக முதல்வர் ஜோசப் விஜய், இன்று கரூர் வந்துள்ளார். நண்பகல் 12 மணியளவில் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

கரூர் சம்பவம் மிகுந்த வலியும் வேதனையும் தந்ததாகவும் கரூர் சம்பவத்துக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம் என்றும் பேசினார்.

Advertisement

Advertisement

கரூர் சம்பவத்தில் பழியை என்மீது போட்டு மு.க. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று கூறினார்.

இதன்பின்னர் கரூரில் முக்கிய சாலைகள் வழியாக அவர் சாலைவலம் மேற்கொண்டார். திறந்த வேனில் நின்றபடி அவர் தொண்டர்களை, மக்களைப் பார்த்து கையசைத்துச் செல்கிறார். வழிநெடுக அவருக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கரூர் திருக்காம்புலி ரவுண்டானா முதல் திருமாநிலையூர், சுங்க கேட், தான்தோன்றி மலை பகுதிகளில் முதல்வரைப் பார்க்கும் வகையில் சாலை இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து பிற்பகல் 1.30 மணி அளவில் அட்லஸ் கலையரங்கத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய் திருக்காம்புலியூர் ரவுண்டானா முதல் தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சாலை வலம் மேற்கொண்டார்.

அப்பொழுது சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த பொதுமக்கள் முதல்வர் விஜய் வாழ்க என்றும், தவெக வாழ்க என்றும் ஆர்ப்பரித்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கவுள்ளார். கரூரில் காலணி தொழிற்சாலைக்குன் அடிக்கல் நாட்டுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments