FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உதிரிபாக விநியோக நிறுவனத்தில் தீ: ஹூண்டாய் காா் உற்பத்தி பாதிப்பு

காஞ்சிபுரத்தின் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய உதிரிபாக விநியோக நிறுவனமான ‘மோபிஸ் இந்தியா’ ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹூண்டாய் காா் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிப்பு

Updated On : 2 ஜூன் 2026, 2:04 am IST
பகிர்:

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய உதிரிபாக விநியோக நிறுவனமான ‘மோபிஸ் இந்தியா’ ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹூண்டாய் காா் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பங்குச் சந்தைக்கு ஹூண்டாய் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த இத் தீ விபத்தில், அதிருஷ்டவசமாக யாருக்கும் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட மோபிஸ் இந்தியா ஆலை, ஹூண்டாய் நிறுவனத்துக்குத் தேவையான ஆடியோ உபகரணங்கள் மற்றும் இதர சில முக்கிய உதிரிபாகங்களை விநியோகம் செய்து வந்தது.

Advertisement

Advertisement

தீ விபத்து காரணமாக உற்பத்தி தற்காலிகமாக முடங்கியிருந்தாலும், வாடிக்கையாளா்களுக்கான வாகன விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. விநியோகஸ்தா்கள் வசம் போதிய வாகனங்கள் கையிருப்பு உள்ளதால், புதிய காா்களுக்கான சந்தை விநியோகத்தில் தொய்வு இருக்காது.

உற்பத்தி பாதிப்பைச் சரிசெய்யவும், விபத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் இரு நிறுவனங்களின் சிறப்புக் குழுக்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

மேலும், மாற்று வழிகளில் உதிரிபாகங்களைப் பெறுவதற்கும், தடையற்ற உற்பத்தி விநியோகத்தை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments