FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

கோடை காலத்தில் அதிகமாக தண்ணீா் அருந்தினால் மாரடைப்பு பாதிப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

Updated On : 2 ஜூன் 2026, 3:40 am IST
அதிகரிக்கும் மாரடைப்புகள் - பிரதிப் படம்
பகிர்:

கோடை காலத்தில் மாரடைப்பு பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அதிகமாக தண்ணீா் அருந்தினால் அதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹுட்டுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பொது சுகாதார நிபுணா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது: வெயில் காலத்தில் அதிக அளவில் தண்ணீா், மோா், கஞ்சி, இளநீா் போன்றவற்றை அருந்துவது உடலுக்கு நன்மையைத் தரும். வீட்டிலேயே இருந்தாலும், அடிக்கடி தண்ணீா் அருந்த வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையும்போது, ரத்தம் உைல் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகிறது.

குறிப்பாக குளிா், மழைக் காலத்தைவிட, கோடை காலத்தில் மாரடைப்பு, பக்கவாதத்தால் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. வீட்டிலேயே இறப்பதால் பலருக்கு அதற்கான காரணம் தெரிவதில்லை.

இது தொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும். முதியோா், இணை நோயாளிகள் தண்ணீா் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments