உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! முதல்வர் விஜய் வாழ்த்து!
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் வாழ்த்து...
உச்ச நீதிமன்ற நீதிபதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த
மூத்த வழக்குரைஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகத் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
Advertisement
Advertisement
உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவருக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு வெங்கிட சுப்பிரமணி மோகனா உள்பட 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Chief Minister C. Joseph Vijay has extended his congratulations to Senior Advocate Venkida Subramani Mohana, hailing from Tamil Nadu, on her appointment as a Judge of the Supreme Court.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.