கோவை மாநகராட்சி ஆணையாளராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்பு!
கோவை மாநகராட்சி ஆணையாளராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சி ஆணையாளராக இன்று கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஆணையாளர் அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மாநகராட்சி ஆணையாளர்,
கோவை மாநகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சென்னையில் பணியாற்றிய அனுபவம் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். கோவை மாநகராட்சி பொருத்தவரை குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறிப்பாகப் பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்குக் கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் பணிபுரிவதைப் பெருமையாக நினைப்பதாகவும் கூறினார்.
Advertisement
Advertisement
கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களிடம் பேசும்பொழுது தான் பல்வேறு விஷயங்கள் தெரியவரும் என்று தெரிவித்தார். கள ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைகளுக்கான முழுமையான தீர்வை காண்பேன் என்றும் கோவை தனக்குப் புதிது என்றும் தெரிவித்தார்.கோவை மாநகராட்சி 97 பேர் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் இருக்கிறார்கள், ஆட்சி தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியாக இருக்கும் பொழுது சவால் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்ன விதிகள் உள்ளதோ அதன்படி நடப்போம் என்று தெரிவித்தார்.
Katta Ravi Teja assumed charge as the Commissioner of the Coimbatore Corporation today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.