கட்சி தொடங்குவது ஜனநாயக உரிமை: நயினாா் நாகேந்திரன்
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...
புதிய கட்சி தொடங்குவது பற்றி அண்ணாமலை இதுவரை என்னிடம் எதுவும் பேசவில்லை என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று தனது பிறந்த நாளில் புதிய இயக்கத்தை / கட்சியைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் பாஜகவில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபற்றி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
Advertisement
Advertisement
"என்னுடைய அருமை சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் குடும்பத்துடன் சுகத்துடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் இதுவரை பேசவில்லை. நாங்களும் அவரிடம் அதுபற்றி பேசவில்லை. வழக்கமான கட்சி ரீதியாக எப்போதும்போல பேசிக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை என்னிடம் ராஜிநாமா கடிதம் எதுவும் வரவில்லை. இதுவரை அண்ணாமலை இதுபற்றி எதுவும் என்னுடன் பேசவில்லை. குடும்ப விஷயங்கள், மற்ற விஷயம் பேசி இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்று தெரிவித்தார்.
BJP Leader Nainar Nagendran talks about annamalai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.