தவெக அரசுக்குக் கால அவகாசம் தேவை: துரை வைகோ!
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ பேசியது பற்றி..
தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய அவர்களுக்குக் கால அவகாசம் தர வேண்டும் எனக் கோவை விமான நிலையத்தில் மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது,
மின்சாரத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், மின்சார துறையில் உள்ள பல்வேறு இடையூறுகளை நீக்கி, இடையூறுகள் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், டெண்டர் சம்பந்தமான ஆர்டிஸ்ட் காரணங்களை, காவல்துறை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.
Advertisement
Advertisement
விவசாயிகளுக்கு அரசு அறிவித்த, பயிர்க் கடன்களை வழங்குவது குறித்து, தமிழக அரசு, துறை சார்ந்த அமைச்சரவை சார்ந்த விளக்கம் கொடுத்துள்ளார்கள் முதல்வர் விஜய் அவர்களும், விளக்கம் கொடுத்திருக்கிறார்கள், விவசாயக் கடனை பொறுத்தவரை ஆட்சி ஏற்றபின் நிதி நிலைமை கருத்தில் கொண்டு சிறுகுறு விவசாயிகள் ஐம்பதாயிரம் வரை தள்ளுபடி செய்ய முடியும் என்பதே உறுதியான நிலை என்றார். தவெக ஆட்சியமைத்தால் அடுத்த நாளே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார் விஜய்.
ஆனால் இதுவரை செய்யவில்லை எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஒருவர் வந்து முதல்வர் ஆட்சிப் பொறுப்பு ஏற்று மூன்று வாரங்கள் தான் ஆகியுள்ளது, அவர் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளைச் சீரமைக்க நாமும் சில நாள்கள் கால அவகாசம் தர வேண்டும். சில காரணங்களால் தமிழகத்தில், போதைப்பழக்கம், உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இனி வருகின்ற காலங்களில் கண்டிப்பாகப் போதை கலாசாரத்தை குற்றச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என நம்புவோம் என்றார்.
கடந்த பத்து வருடங்களாக நாங்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள் இப்பொழுதும் அதில் தான் இருக்கிறோம் என்றார். திமுக சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டுள்ளோம், தற்பொழுது திமுக உடன் தான் பயணிக்கின்றோம் என்றார். கடந்த காலங்களில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்ததோ, அதேபோலத் தான் இப்போதும் உள்ளது. 100% குற்ற சம்பவங்கள் இல்லாத உருவாக்க முடியாது என்றார்.
At the Coimbatore Airport, MDMK Principal Secretary Durai Vaiko stated that the DMK-led government should be given adequate time to fulfill all the promises outlined in its election manifesto.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.