‘மக்கள் மேடை’ : புதிய இயக்கம் தொடங்கினாா் லதா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளது பற்றி...
'மக்கள் மேடை' என்ற தனி இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்.
தமிழகத்தில் மாற்றத்தை விரும்புவோர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் இந்த இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,
Advertisement
Advertisement
"எங்களுடைய 'மக்கள் மேடை' என்ற மக்கள் இயக்கத்தில், இந்த மாநிலத்திற்காக வேலை செய்ய நினைக்கும் அத்தனை பேரும் ஒன்றாக சேர்ந்து தொடர்புகொண்டு ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவாகி இந்த மாநிலத்திற்கு பல நன்மைகளைச் செய்ய முன்வாருங்கள். ஒன்றாக சேர்ந்து ஆக்கப்பூர்வமான பல காரியங்களைச் செய்வோம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் நாங்கள் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் அனைவரும் இதில் சேரலாம்.
சாமானியன் முதல் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள், இளைஞர்கள், ராணுவ அதிகாரிகள் என யார் வேண்டுமானாலும் எங்களைத் தொடர்புகொண்டு உங்களுடைய அனுபவத்தை வழங்கலாம். மாற்றத்தை விரும்புவோர் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்" என்று பேசியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி இன்று புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில் லதா ரஜினிகாந்தும் இந்த புதிய இயக்கத்தை அறிவித்துள்ளார்.
கடந்த 2020ல் ரஜினிகாந்த் அவரது கட்சியில் சேர அழைத்தும் நான் மறுத்து பாஜகவில் இணைந்ததாக அண்ணாமலை இன்று காலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth wife Latha has launched an independent movement 'makkal medai, makkal iyakkam'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.