FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவர்களே நம் நாட்டின் எதிர்காலம்- சௌந்தர்யா ரஜினிகாந்த்

தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த்....

Updated On : 24 ஜூலை 2026, 5:16 pm IST
சௌந்தர்யா ரஜினிகாந்த்
பகிர்:

மாணவர்களே நம் நாட்டின் எதிர்காலம் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். மாணவர்களே நம் நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல்கள் பரிவு, கண்ணியம் மற்றும் மரியாதையுடன் கேட்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கை, நியாயம் மற்றும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும் கல்வி அமைப்பைப் பெற தகுதியானவர்கள். அந்த இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் அவர்களது போராட்டத்துக்கு பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிஜேபி இயக்கம் கடந்த ஜூன் மாத இறுதியில் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளா் சோனம் வாங்சுக் தலைமையில் தொடங்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திலிருந்து உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Soundarya Rajinikanth has stated that students are the future of our country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments