3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின்
3 மாதங்களாவது தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 மாதங்களாவது தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், செய்யூர் தொகுதிக்கும் திமுக ஆட்சியின்போது எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினோம். திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் வேலை அதிகமாக இருக்கும். ஏற்கெனவே இருந்த இயக்கத்தைப் பற்றி பாபு விமர்சித்து பேச வேண்டாம்.
Advertisement
Advertisement
இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சி பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றபோது நான் சொன்னேன், 6 மாதங்களுக்கு எந்த பிரச்னையும் பேசப்போறது இல்லை என்று. ஆனால் 6 மாதங்களுக்கு முன் பேச வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது.
அதை பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 6 மாதம் இல்லை, 5 மாதம் இல்லை, 4 மாதம் இல்லை, 3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.
DMK President M. K. Stalin has stated that this government is functioning under a question mark of whether it will even last for at least 3 months.