சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிடும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஜூன் 11 முதல் 14 வரை மாலை/இரவு வெப்பச்சலன மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொய்வடைவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சாதகமான மேற்கு திசை காற்றின் போக்கு மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதம் காரணமாக ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மாலை/இரவு வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை மாலை/இரவு நேரத்தில் பதிவாகக் கூடும்.
பகலில் மழை வாய்ப்பு இல்லை வெய்யிலே தொடரும், இடி மழை வாய்ப்பு மாலை/இரவு மட்டுமே. அத்துடன் மழையின் போது வலுவான இடி,மின்னல் இருக்ககூடும். மாவட்டம் முழுதும் ஒரே நேரத்தில் மழை இருக்காது, ஆங்காங்கே பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Private weather analyst Hemachandran has stated that there is a possibility of heat-convection rain in northern coastal districts, including Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.