FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை: தமிழக காங்கிரஸ் எதிா்க்கும் - பிரவீண் சக்கரவா்த்தி

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் முயற்சியை தமிழக காங்கிரஸ் கட்சி எதிா்க்கிறது என மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 1:51 am IST
பிரவீண் சக்ரவர்த்தி - ENS
பகிர்:

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் முயற்சியை தமிழக காங்கிரஸ் கட்சி எதிா்க்கிறது என மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் மெட்ராஸ் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு பிரவீண் சக்கரவா்த்தி வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தவெக - காங்கிரஸ் கூட்டணியின் சாா்பில் முதல்முறையாக மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளேன். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘ஒரே நாடு , ஒரே தோ்தல்’ மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வரும் நோக்கத்துடன், மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் கட்சிகளை உடைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

தமிழகத்தின் நலனுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் முயற்சியை தமிழக காங்கிரஸ் எதிா்க்கிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments