சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
போரூர் அருகே இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் அருகே இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் பகுதி மாங்காடு அருகே 23 வயது இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாங்காடு பகுதியைச் சேர்ந்த தனவேல் (50) என்பவரை போரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
தனவேல் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகள் நடந்து வந்த பகுதியில் காவலராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Young woman sexually harassed near Porur, Chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.