தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கை தகவல்
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம் என்பது குறித்து வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் தொகை ரூ.1,28,934 ஆக உள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை, விஜய் தலைமையிலான தவெக அரசில் நிதித் துறை அமைச்சராக உள்ள மரிய வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டு உரையாற்றினார்.
அப்போது அவர் வெளியிட்ட தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 2020 - 21-ஆம் நிதியாண்டில், ரூ.67,087 ஆக இருந்த தனி நபர் கடன் தொகை என்பது, 2025 - 26-ஆம் நிதியாண்டில் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.
சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டி செலவினத்துக்கே, அதாவது மூன்று ரூபாயில் ஒரு ரூபாய் கடனுக்கான வட்டி செலவினத்துக்கே செலவிடப்படுகிறது.
ஒவ்வொரு நிதியாண்டுக்கும் வட்டிக்கு மட்டும் தமிழக அரசு சார்பில் ரூ.67,050 கோடியை செலவிடப்படுகிறது
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சரிவுப் பாதையில் சென்றது ஒரு கொள்கைத் தோல்விதான். தமிழகத்தின் சரக்கு, சேவை வரி வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் தொகை, மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து, தனிநபர் மீதான கடன் தொகை கணக்கிடப்படுகிறது.
A white paper released by the Tamil Nadu government states that the debt burden per individual in the state stands at ₹1,28,934.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.