முகப்பு
தமிழ்நாடு

அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி

ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி பேசியது குறித்து...

Updated On : 28 ஜூன் 2026, 12:15 pm IST
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்
பகிர்:

அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயம் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர், திருமண விழாவில் பேசிய‌ உதயநிதி, "இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த சோபா மாடல் ஆட்சியுடைய, போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் அடிச்சு, துவைக்கப்பட்டு, நொறுங்கி கிடக்கின்றது.

Advertisement

Advertisement

பிற கட்சிகளுக்கு முதல்ல சோபா போகும். சோபாவிற்கு பின்னாடியே நம்முடைய முதலமைச்சர் துரத்திக்கிட்டே போவார், பின்னர், முதலமைச்சர் பின்னால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ராஜிநாமா கடிதத்தோடு அவங்களும் கியூல செல்வதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்கிறோம்.

​அதுமட்டும் இல்ல, இன்னைக்கு தமிழ்நாட்டுல எங்க பார்த்தாலும் மின்வெட்டு. ஆச்சரியம் என்னவென்றால், இந்த நேரம் வரைக்கும் இந்த மண்டபத்துல மின்வெட்டு ஆகாம இருக்கு.

​எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இது சட்டமன்றமா? இல்ல சினிமா தியேட்டரா? இல்லை ஏதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறமோ என்ற அளவுக்கு, இன்றைக்கு சட்டமன்றத்துடைய தரத்தையே நம்முடைய ஆளுங்கட்சியினர் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனா எதற்கு எடுத்தாலும் திமுகதான் காரணம் என்ற ரெடிமேட் பதிலாக இன்றைய ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். ​அதுமட்டும் இல்லை, நம்முடைய தலைவரை சிறுமைப்படுத்து விதமாக முதல்வர் பேசினார்.

நம்ம தலைவர் என்றைக்கும் தேடிக் கண்டுபிடிக்கிற இடத்தில் இருந்ததே கிடையாது. மிசா நேரத்தில் தலைவரைத் தேடி போலீஸ் கோபாலபுரம் இல்லத்திற்கு அவரை கைது செய்வதற்கு வந்தாங்க. அப்போ கலைஞர் அவர்கள் சொன்ன பதில், "என்னுடைய மகன் கட்சி நிகழ்ச்சிக்காக வெளியூர் போயிருக்காரு, வந்ததும் நானே உங்ககிட்ட அனுப்பி வைக்கிறேன்" என்று சொன்னவர்தான் டாக்டர் கலைஞர் அவர்கள். கலைஞர் சொன்னபடி கட்சிப்பணி முடிந்து வந்த நம்முடைய தலைவரை உடனடியாக காவல் நிலையத்திற்கு அனுப்பி வைச்சார்.

இன்னும் அவர் சட்டமன்றத்துல டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த கூட்டத்தொடர்ல நிச்சயம் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸும் இருக்கும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு” என்றார்.

summary

Leader of the Opposition Udhayanidhi Stalin has stated that there will certainly be a dance performance during the next legislative session.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments