FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல்

கோவை மாணவர் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆறுதல் தெரிவித்திருப்பது பற்றி....

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 3:53 pm IST
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திகுறிப்பு: ஏற்கெனவே சட்டசபையில் அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்தபோது, திங்கள் அன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக பேரவைத் தலைவர் தெரிவித்திருந்தார். ‘’உதயநிதிதான் நீதி பெற்று தர வேண்டும்’’ என்று அமுதனின் தாயாரும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

இன்று அமுதனின் பெற்றோரைத் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதனின் மரணத்துக்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

Advertisement

Advertisement

மேலும் திங்கள் அன்று சட்டபேரவையில் இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பேசுவதாகவும் அமுதனின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை, அமுதனின் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து போராடுவதாகவும் உறுதிபட தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வள்ளலாா் வீதியைச் சோ்ந்தவா் கென்னடி மகன் அமுதன் (19). இவா் கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் இரு தரப்புக்கு ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக ஒரு தரப்பிலும், போதைப் பொருள் கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் கூறுகின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

Leader of the Opposition Udhayanidhi Stalin contacted over phone the parents of Amudhan, a college student who was murdered by fellow students in Coimbatore, and offered his condolences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments