முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 30 ஜூன் 2026, 9:39 pm IST
சி. ஜோசப் விஜய் - டிஐபிஆர்
பகிர்:
Updated On : 30 ஜூன் 2026, 9:39 pm IST

திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

summary

கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 9:22 pm IST

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 9:21 pm IST

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை: இடதுசாரி கட்சிகள்

தவெக நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேகப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 30 ஜூன் 2026, 6:36 pm IST

என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?

ஏற்கனவே வானிலை மாற்றங்கள் அவ்வளவு ஒன்றும் மக்களுக்கு சாதகமாக இருக்கவில்லை, உலகம் முழுவதும் வாட்டி வதைக்கும் வெய்யில், அடித்துச் செல்லும் மழை என இருக்கிறது.

Updated On : 30 ஜூன் 2026, 6:35 pm IST

குஷ்பு மகள் திருமணத்தில் பலரும் கவனித்த ஒரு விஷயம் இதுவா? ஆச்சரியம்

நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், குஷ்பு பகிர்ந்த ஒரு விடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Updated On : 30 ஜூன் 2026, 6:35 pm IST

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

முதல்வர் விஜய் வெற்றிபெற்று, ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 5:39 pm IST

இலவச பயணத் திட்டத்துக்கு எதிர்ப்பு... கேரளத்தில் தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்டம்!

summary

கேரளத்தில் இலவச பயணத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.

Updated On : 30 ஜூன் 2026, 5:34 pm IST

தருமபுரி: மனைவி, மகளை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை!

summary

தருமபுரியில் மனைவி, மகளை கொன்று லாரி முன் விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 3:12 pm IST

எஸ்.பி. வேலுமணி போர்க்கொடி

என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 3:02 pm IST

எஸ்ஐஆர்: காங்கிரஸ், திமுக ஆகிய 21 கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!

Updated On : 30 ஜூன் 2026, 3:02 pm IST

மயிலாடுதுறையில் காதல் ஜோடி உடல்கள் கண்டெடுப்பு! ஆணவப் படுகொலையா?

Updated On : 30 ஜூன் 2026, 3:02 pm IST

கரூர் பலி: பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! எப்போது?

Updated On : 30 ஜூன் 2026, 3:00 pm IST

கண்ணீருடன் விடைபெறுகிறேன் - எம்.ஆர். விஜயபாஸ்கர்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 1:32 pm IST

கழுத்தறுத்து ஒருவர் கொலை

சேலம் அருகே கழுத்தை அறுத்து ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலத்தை மூட்டையாக கட்டி காவிரி ஆற்றில் மர்ம நபர்கள் வீசியுள்ளனர்.

Updated On : 30 ஜூன் 2026, 1:18 pm IST

கமிஷன், கட்டிங், கரப்ஷன்!

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலம் ஊழல் நடைபெற்றதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 1:06 pm IST

பிரதமர் மோடி தூங்கமாட்டார்!

பிரதமர் நரேந்திர மோடி தூங்கமாட்டார், தன்னைப்போன்று அதிகாலை எழுந்துகொள்வார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 1:06 pm IST

இனி குரல் மூலம் போட்டோ எடுக்கலாம்!

ஐபோன் கேமராவில் செய்யறிவு (ஏஐ) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் குரல் வழியில் கேமராவை கட்டுப்படுத்தி புகைப்படம், விடியோ எடுக்கலாம். எடிட்டிங் செய்யலாம்.

Updated On : 30 ஜூன் 2026, 12:09 pm IST

இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

சிந்து நதி தண்ணீரில் பாகிஸ்தானுக்கான பங்கீட்டில் உரிமை கோரும் கைகளை வெட்டுவோம் என்று அந்நாட்டின் அமைச்சர் முசாதிக் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 12:08 pm IST

வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு!

இது நம்ம இயக்கத்தின் நிறுவனரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான கே. அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு திரும்பப் பெற்றார்.

Updated On : 30 ஜூன் 2026, 12:08 pm IST

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 11:41 am IST

மேயர் பிரியா, சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மேயர் ஆர். பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Updated On : 30 ஜூன் 2026, 11:41 am IST

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி! மொபைல் எண் தெரியாமலேயே 'மெசேஜ்' செய்யலாம்!

வாட்ஸ்ஆப்பில் 'யூசர் நேம்' எனும் பயனாளர் பெயர் இடம்பெறும் புதிய வசதி அறிமுகமாகிறது. இதன் மூலமாக உங்களுடைய மொபைல் எண் தெரியாமலேயே நீங்கள் மற்றவருக்கு மெசேஜ் செய்யலாம்.

Updated On : 30 ஜூன் 2026, 11:39 am IST

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்! (ஜூன் 30)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 30) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 11:39 am IST

பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை (டிஎன்இஏ 2026) உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் நாளை(ஜூலை 1) காலை வெளியிடுகிறார்.

Updated On : 30 ஜூன் 2026, 11:39 am IST

குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று(ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 11:38 am IST

கோடிகளில் கடன்; நட்டாற்றில் விட்ட ராமதாஸ்! கலக்கத்தில் தொண்டர்கள்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 61-ஆவது திருமணநாள் நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு தனது பெற்றோரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் ஆரத்தழுவிக் கொண்டனர்.

Updated On : 30 ஜூன் 2026, 11:38 am IST

சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதம்!

18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 11:31 am IST

20 ஆண்டுகளை நிறைவு செய்த உலகின் மிக உயரமான ரயில் நிலையம்!

உலகின் மிக உயரமான ரயில் நிலையமான திபெத் ரயில் நிலையம், வெற்றிகரமாக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சூறாவளி, பனிப்பொழிவு, கனமழை என கடுமையான இயற்கை சூழலையும் தாண்டி இந்த ரயில் நிலையம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

Updated On : 30 ஜூன் 2026, 11:31 am IST

மருத்துவ நீட் தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வு முகமை வட்டாரம் தகவல்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளை ஜூலை 20 ஆம் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 30 ஜூன் 2026, 11:31 am IST

சூரிய வெப்பத்தில் ஆம்லெட் போடும் பிரான்ஸ் இளைஞர்!

ஐரோப்பாவில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெய்யிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சூரிய வெப்பத்தில் ஆம்லெட் சமைக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Updated On : 30 ஜூன் 2026, 11:30 am IST

அமெரிக்காவுக்காக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்: டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 11:30 am IST

சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ்! விருதுநகர் தவெக நிர்வாகி நீக்கம்!

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட விருதுநகர் மாவட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி தவெக உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 11:00 am IST

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பிலை: திருமாவளவன்

தமிழக வெற்றிக் கழகத்திற்காக துணை நிற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments