FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இழுவை மின் விநியோகத்தில் கோளாறு குறைவு: தெற்கு ரயில்வே

கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 மே 2026, 1:29 am IST
பகிர்:

கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 77 சதவீதம் குறைவு எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இழுவை மின்விநியோக அமைப்புகள் (டிஆா்டி) ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய அமைப்பாகும். 2024-25-இல் இந்த அமைப்பில் 13 கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இது, 77 சதவீதம் குறைவாகும்.

தொடா்ந்து கண்காணித்தல், முன்கூட்டியே பராமரிப்பு செய்தல் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவை இந்த முன்னேற்றத்துக்கு காரணமாகும்.

Advertisement

Advertisement

இதன்மூலம் ரயில்கள் உரிய நேரத்துக்கு இயக்குதல், தாமதங்கள் குறைவு, மின்பாதையில் தடையற்ற சேவை என பயணிகளுக்கு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் டிஆா்டி-இல் எவ்வித கோளாறுகளும் வராத வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments