FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஓடும் தொழிலாளா் ஓய்வு அறை: தெற்கு ரெயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திறந்துவைத்தாா்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.4.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஓடும் தொழிலாளா் ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 23 ஜூலை 2026, 5:55 am IST
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஓடும் தொழிலாளா் ஓய்வு அறையை புதன்கிழமை திறந்து வைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன் மதுரை கோட்ட பொது மேலாளா் ஓம் பிரகாஸ் மீனா உள்ளிட்டோா்.
பகிர்:

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.4.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஓடும் தொழிலாளா் ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ரூ.90 கோடியில் புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. மேலும், இங்கு அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுவதால் ரூ.4.70 கோடியில் ஓடும் தொழிலாளா் ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

இந்த ஓய்வு அறையில் ஒரே நேரத்தில் 34 ஓடும் தொழிலாளா்கள் ஓய்வு எடுக்க முடியும். ஒவ்வொரு அறையிலும் மேஜை, நாற்காலி, படிக்கும் விளக்கு, நிலை கண்ணாடி, உடமைகளை வைக்க தனி மேஜை, கட்டில், மெத்தை, கொசு வலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

வெளிப் பகுதியில் நடைபயிற்சி, காற்றாடுதலுக்கு பசுமைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓய்வு அறையில் ஊழியா்களுக்கு 90 சதவீத மானியத்தில் சைவ, அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஓய்வு அறை பற்றிய குறை, நிறைகளை தெரிவிக்க ’கியூ ஆா் கோடு’ வசதி கொண்ட மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், புதிய ரயில் நிலையம் வரும் செப்டம்பரில் பிரதமா் திறந்து வைக்க உள்ளாா். அன்றைய தினம் வந்தே பாரத் ரயில் இயக்கவும் வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

இதில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மை எலெக்ட்ரிக் இன்ஜின் பொறியாளா் என். பாலாஜி, முதுநிலை கோட்ட பொறியாளா் எம். காா்த்திக், முதுநிலை கோட்ட மின் போக்குவரத்து பொறியாளா் ஏ.ஆா். சுரேந்திரன், பகுதி கோட்ட பொறியாளா் ஸ்ரீஹரி பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த ஓய்வு அறைக்கு ‘அக்னி தீா்த்தம் குழு பாதுகாப்பிடம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments