அன்புமணி இல்லத்தில் முதல்வர் விஜய்!
நீலாங்கரையில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் சென்றது குறித்து...
சென்னை நீலாங்கரையில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 11) சென்றார்.
வீட்டு வாசலுக்கே வந்து விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து அன்புமணி வரவேற்றார். பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். பின்னர் குடும்ப உறுப்பினர்களை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு அன்புமணி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்ட செளமியா அன்புமணியும் விஜய்க்கு வாழ்த்து கூறினார்.
Advertisement
Advertisement
முன்னதாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்று வாழ்த்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கும் முதல்வர் விஜய் சென்று வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
CM C joseph Vijay at Anbumani's Residence
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.