முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியதையடுத்து உறுப்பினர்கள் பதவியேற்று வருகிறார்கள்.

தமிழக சட்டப்பேரவை - IANS
பகிர்:

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்குக் கூடியது. இடைக்கால அவைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட சோழவந்தான் கருப்பையா அவையை நடத்தி வருகிறார்.

எதிர் எதிர் வரிசையில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அமர்ந்திருக்க, எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்துள்ளனர்.

பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களில் வென்ற தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.

சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், நேற்று தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் மற்றும் அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், புதிதாகத் தேர்வான சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகிறார்கள். முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்று வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments