கோவை அருகே தங்கையின் காதலனைக் கொன்ற சிறுவனுக்கு மூன்று ஆண்டு சிறை
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தங்கையின் காதலனைக் கொன்ற சிறுவனுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தங்கையின் காதலனைக் கொன்ற சிறுவனுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்ததாக தெரிகிறது. இதை அறிந்த சிறுமியின், அண்ணன் சிறுமியையும், அவரின் காதலனையும் கண்டித்து உள்ளார். ஆனாலும் அந்த நபர் சிறுமி மீதான காதலை விடவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக சிறுமியின் காதலனுக்கும், அண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதமானது. இந்நிலையில் அந்த சிறுமியின் காதலனுக்கும், அவரின் அண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிறுமியின் அண்ணன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் காதலனான கூலித்தொழிலாளியை குத்திக் கொலை செய்தார்.
Advertisement
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் அண்ணனை கைது செய்து இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கை கோவையில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கு இடையே வெளியில் வந்த அந்த சிறுவன் மாயமானான். இதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
தற்போது இந்த கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.