விவசாயம் செழிக்க 650 கிடா வெட்டி கறி விருந்து!
குருங்குளத்தில் நடைபெற்ற கிடா விருந்து தொடர்பாக..
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் முத்துமாரியம்மன் மற்றும் அய்யனார் கோயில் கிடாவெட்டு திருவிழா கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.
வீட்டுக்கு வீடு பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களை அழைத்து கிராமம் முழுவதும் 650 கிடா வெட்டி கறிக்குழம்பு, கறி வறுவல், மீன் குழம்பு, மீன் வறுவல் என அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் பந்தல் அமைத்து இந்தக் கறி விருந்து விழா விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
26 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழாவானது இன்று(மே 20) முதல் 7 நாள்கள் 7 கிராமங்களில் நடைபெறுகிறது.
நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க, முன்னோர்கள் காலத்தில் இருந்து, இந்தக் கறி விருந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
The Kidavettu festival at the Muthumariamman and Ayyanar Temple in Kurungulam, Thanjavur district, was celebrated with great grandeur after a hiatus of 26 years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.