அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன்
அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என திருமாவளவன் தெரிவித்தது பற்றி...
அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று தவெக உறுதியளித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்கட்டமாக முதல்வர் ஜோசப் சி. விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், இந்த வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைய வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்புக்கு அமைச்சரவையில் இடம் தரப் போவதாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து, அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமளித்தால் தங்களின் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகள், விசிக அறிவித்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும், அதிமுகவில் இருந்து விலகியிருக்கும் ஒரு பிரிவினருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாது என்று தவெக தரப்பில் தெரிவித்ததாக திருமாவளவன் குறிப்பிட்டார்.
TVK Confirms No Place for AIADMK in Cabinet - Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.