பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர உத்தரவு!
பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர உத்தரவு...
பள்ளிக்கல்வித் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தினமும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிக்கை விடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள்ளாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பள்ளிக்கல்வித்துறை பணியாளா்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
அலுவலக உதவியாளர்கள், கிளார்க் அனைவரும் காலை 9.30 மணிக்கே அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
விடுப்பு பெறுவது என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முன்னரே அனுமதி பெற வேண்டும். விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இவை அனைத்தும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றத் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
School Education Department officials and staff ordered to report to the office by 10 AM
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.