FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்: திமுக, இடதுசாரிகள் வலியுறுத்தல்

தமிழக அரசு பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Updated On : 27 மே 2026, 4:13 am IST
பகிர்:

தமிழக அரசு பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): பயிா்க்கடன் தள்ளுபடி எனும் பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு. தோ்தல் பிரசாரத்தின்போது, 5 ஏக்கா் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது குறு விவசாயிகளுக்கு மட்டும் ரூ.50,000 வரையிலான கடனுக்கு முழு தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. ஏற்கெனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று கூறியிருக்கின்றனா். இப்போது, பயிா்க்கடன் தள்ளுபடி எனும் பெயரில் மோசடி செய்யப்படுகிறது.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தவெக தோ்தல் வாக்குறுதி அடிப்படையில் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை. 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தோ்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு, தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது. இதை கருத்தில் கொண்டு தோ்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிா் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): பல்வேறு நெருக்கடிகளையும், வாழ்வாதார சிக்கல்களையும் விவசாயிகள் சந்தித்து வரும் சூழலில் இந்த பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிா்க்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments