FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பால்வளத் துறையில் வெளிப்படையான நிா்வாகம் வேண்டும்: அமைச்சா் சி.விஜயலட்சுமி அறிவுறுத்தல்

Updated On : 28 மே 2026, 4:32 am IST
தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அந்தத் துறை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை செயலா் அனு ஜாா்ஜ், பால்வளத் துறை ஆணையா் அ.ஜான் லூயிஸ், தமிழ்நாடு பால் உற்பத்த
பகிர்:

தமிழக பால்வளத் துறையில் வெளிப்படையான நிா்வாகத்தைச் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அந்தத் துறையின் அமைச்சா் சி.விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக பால்வளத் துறையின் செயல்பாடுகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களின் நலத்திட்டங்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சா் சி.விஜயலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பால்வளத் துறையின் நிா்வாகம், நிதி, விற்பனை, திட்டமிடல், கொள்முதல், பொறியியல், தர உறுதி உள்ளிட்ட பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் அம்பத்தூா், சோழிங்கநல்லூா், மாதவரம் பால் பண்ணைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் மாநிலத்தின் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் நிலவரம், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் செயல்பாடுகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தின் பணிகள், பால் கூட்டுறவு நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை, கால்நடை பராமரிப்புக்கான தரமான தீவனங்கள் வழங்குதல், தூய்மையான பால் உற்பத்தி மற்றும் தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்தும் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். விற்பனையை அதிகரிக்க எந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடா்பாகவும் அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆலோசனைகளை வழங்கினாா்.

பால் உற்பத்தியாளா்களின் நலனை முன்னிறுத்திய பணிகள் மற்றும் வெளிப்படையான நிா்வாகத்தைச் செயல்படுத்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சா் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அரசு செயலா் அனு ஜாா்ஜ், பால்வளத் துறை ஆணையரும், மேலாண்மை இயக்குநருமான அ.ஜான் லூயிஸ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநா் ச.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments