தவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!
அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தது பற்றி...
அதிமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணைந்தனர்.
சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் தவெகவில் இணைந்தனர்.
தவெகவுக்கு இதுவரை தொழிற்சங்கம் இல்லாத நிலையில், தற்போது அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்துள்ளதால் தவெகவில் புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மேலும், இன்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர்.
AIADMK Union people joins TVK today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.