ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது பற்றி..
ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டச் செயலாளரும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சரத்குமார் அறிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு கிரேன் ஓட்டுநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகி கட்டடம் இடிக்கும் பணியிலிருந்த தொழிலாளர்களிடம் தனக்கு இலவசமாக செங்கல் மற்றும் ஜல்லி தருமாறு மிரட்டிய தவெக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய் கிருஷ்ணன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் ஜெய் என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக அவர் மீது தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது.
Advertisement
Advertisement
மேலும், அதிரடி உத்தரவாக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டச் செயலாளரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சரத்குமார் தமிழக வெற்றிக் கழகம் கழகத்தின் உரிய ஒப்புதலுடன் அதிரடி உத்தரவாக அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sarathkumar, the Chengalpattu North-West District Secretary and Minister for Human Resources Development, has announced that the TVK functionary who assaulted a JCB operator has been expelled from the party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.