பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழை! (நவ. 4)
அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறித்து...
அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முரசு புயல் ஆந்திர கடற்கரையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக வட கடலோர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கடலூர் மாநகரப் பகுதிகள், முதுநகர், தேவனாம்பட்டினம், திருப்பாதிரிப்புலியூர், தாழங்குடா, ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகள் நேற்று (நவ. 4) பலத்த மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
Advertisement
Advertisement
வளிமண்டல சுழற்சி நிலவுவதால், இன்று நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.