ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு! குளிக்கத் தடை
ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதித்துள்ளனர் வனத்துறையினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி அருவி அமைந்துள்ளது. அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சீராக வந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதிகளவில் செந்நிறத்தில் நீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.