8 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
8 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து...
அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து மேலும் அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க 8 ஆவது நாளாக புதன்கிழமை தடை விதித்து வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்துக்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த 7 நாள்களுக்கும் மேலாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து தொடரந்து அதிகரித்தது.
இதையடுத்து, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 8 ஆவது நாளாக வனத்துறையினா் தடை விதித்தனா். மேலும், மறுஅறிவிப்பு வரும் வரை அருவியில் குளிக்க அனுமதி என வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Ban on bathing at Manimutharu Falls continues for the 8th day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.