FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திரையரங்குகளில் காலை 6 மணிக்கு வெளியான சூர்யாவின் 'சீன்'!

திரையரங்குகளில் காலை 6 மணிக்கு சீன் திரைப்படம் வெளியானது குறித்து...

பகிர்:

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட மாநில அரசு அனுமதியளித்துள்ள நிலையில், திரையரங்குகளில் இன்று காலை 6 மணிக்கு சீன் திரைப்படம் வெளியானது.

மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவின் வேகமான டிக்கெட் விற்பனை என்றும் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சீன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

Actor Suriya's 'Scene' was released in cinema theaters across Tamil Nadu at 6 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.