FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்: ப. சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ப. சிதம்பரம் கூறியிருப்பது தொடர்பாக...

சிதம்பரம் நடராஜர் கோயில் - கோப்புப்படம்
பகிர்:

நவம்பர் 5 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களையும் வகையில், நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், கோயில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை மாதந்தோறும் அந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் களையப்படும் வரை இந்தக் குழு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Advertisement

Advertisement

கோயிலை நிர்வகிக்க முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவை உயர்நீதிமன்றம் அமைத்ததற்கு எதிராக பொது தீட்சிதர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இடைக்காலத் தடை

இந்த மேல்முறையீடு மனு புதன்கிழமை(நவ.4) இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் தலையீட்டில் இருந்து மீட்க வேண்டும். கோயிலுக்கு அரரால் தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று தீட்சிதர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கனகசபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தீட்சிதர்கள் தடை ஏற்படுத்துவதாக தமிழ அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, நிர்வாகம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உயர்மட்ட குழு மற்றும் தொல்லியல் துறை உள்ளிட்ட அமைப்பு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், காவலில் வைப்பதற்கும் கைது செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து மாற்றி அமைத்துள்ளது.

ப. சிதம்பரம் வரவேற்பு

இந்த நிலையில், அடிப்படை உரிமைகள் மற்றும் காவலில் வைப்பது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை தவறு என்று உச்ச நீதிமன்றம் முடிவு எடுத்திருப்பதை காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் 5.11.2026 தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தையத் தீர்ப்பைத் தவறு என்று முடிவெடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

'காவல்' வேறு, 'கைது' வேறு என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு வியப்பளித்தது.

அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரை ஒரு மனிதனைக் 'காவலில்' வைப்பதும் 'கைது' செய்வதும் ஒன்று தான் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மனித உரிமையையும் அடிப்படை உரிமையையும் நிலை நாட்டியிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Administration of the Chidambaram Natarajar Temple; I welcome the Supreme Court's verdict

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.