அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ.18 வரை நீட்டிப்பு
திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை வரும் நவ.18 வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை வரும் நவ.18 வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக அன்பில் மகேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக, மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில், அன்பில் மகேஸ் கடந்த அக்.26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கில்,விசாரணை முடிந்து தீா்ப்புக்காக நவ.10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அன்பில் மகேஸ் காணொலி வாயிலாக, சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை வரும் நவ.18-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.