FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம்: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து...

தவெக எம்எல்ஏ முஸ்தபா | முன்னாள் துணை மேயர் மன்னன்
பகிர்:

தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தன்னிடம் பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகியும் மதுரை மாநகர் முன்னாள் துணை மேயருமான மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க மன்னன் ரூ. 30 கோடி பேரம் பேசியதாக எம்எல்ஏ முஸ்தபா புகாரில் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ரூ. 15 கோடியும், பின்னர் ரூ. 15 கோடியும் வழங்க மன்னன் முன்வந்ததாக முஸ்தபா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், இது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவில் முஸ்தபா புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகி மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

Case registered under the Prevention of Corruption Act against AIADMK Mannan for allegedly negotiating to topple the TVK government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.