FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குரியன் குழு கலைப்பு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

மத்திய - மாநில உறவை ஆராயும் குரியன் தலைமையிலான குழு கலைப்பு ஏன் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்திருப்பது பற்றி...

33 வினாடிகள் முன்பு
அமைச்சர் நிர்மல் குமார்.
பகிர்:

மத்திய - மாநில உறவை ஆராயும் குரியன் தலைமையிலான குழு கலைப்பு ஏன் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time

Advertisement

Advertisement

மு.க. ஸ்டாலின் சார்.

ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து:

ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜிநாமா செய்தார்.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .

இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.)

புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்:

தலைவர்:

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்.

முழுநேர உறுப்பினர்கள்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் டீக்கா ராமன்.

டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்.,

(அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.)

ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர்.

பகுதிநேர உறுப்பினர்கள்:

பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)

ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)

இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினால் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த 2026 பிப்ரவரியில் தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Minister Nirmal Kumar has explained why the Justice Kurian Joseph-led High-Level Committee on Union–State Relations was dissolved.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.